தேர்தலுக்காக விஷேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

0
116

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இன்று (07) மாலை 4.00 மணிமுதல் விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர் பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்

அத்துடன் இம்மாதம் 09 ஆம் திகதி அதிகளவான பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்கு, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.