அந்தமான் தீவில் நிலநடுக்கம்

0
260

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 8.09 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.