அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

0
102

தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு வௌியில் சென்று விமர்சனம் செய்ததன் காரணமாக இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.