முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராக நியமனம்

0
114

சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது