23 ஆம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவும்

0
132
Sri Lanka AL OL Exam students sitting Education Photo

2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் சுயமாகவும் விண்ணப்பிக்க முடியும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும், பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.