தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்

0
151

இம்முறை நாடு முழுவதும் உள்ள 19 தேசிய கல்வியல் கல்லூரிகளில் 27 பாடநெறிகளுக்காக 4,745 விண்ணப்பதார்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தேசிய கல்வியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு வர்த்தமானியின் பிரகாரம் மாவட்ட ரீதியில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமான விண்ணப்பதார்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.