லலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்

0
88

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.

லலித் வீரதுங்கவால் முன்வைக்கப்பட்ட மறுபரிசீலனை மனு இன்று (02) பிரித்திபத்மநாதன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது லலித் வீரதுங்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது கட்சி தாரருக்கு கடமை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்திரேலியா மற்றும் கடார் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்குமாறு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.