அம்பாறையில் ஹர்த்தால்

0
113

கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்து அம்பாறை, அக்கரைபற்று பகுதிகளில் இன்று (06) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுகின்றது.

இதனால் இப்பிரதேசங்களிலுள்ள அரச, தனியார் காரியாலயங்கள், வங்கிகள், பாடசாலைகள் அனைத்தும் இயங்கவில்லை எனவும் வர்த்தக நிலையங்கள், கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அட்டாளச்சேனையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களையும் அகற்றுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.