கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

0
120

தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்தடன் இப்பகுதியில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.​