பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

0
108

உடன் அமுலுக்கு வரும் வகையில் பல்லேகல மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கு என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.