கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

0
114

இன்று (09) இரவு 8 மணியில் இருந்து நாளை (10) காலை 5 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மா நகர சபை பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி, திகன நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் அவசர கால நிலைமை பிரகடணப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டன.

மேலும், கண்டி நிர்வாக மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.