கிளிநொச்சியில் 1.5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
103

இன்று (09) கிளிநொச்சியில் 1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டபோது குறித்த கஞ்சா பொதியும், கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதியே இவ்வாறு கைப்பெற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரையும், கஞ்சா பொதியையும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.