காதலியை உயிருடன் கொளுத்திய முன்னாள் காதலன்

0
230

அமெரிக்காவின் அரிஸோனாவில் ஒரு குழந்தைக்கு தாயான தனது முன்னாள் காதலியை உயிருடன் கொளுத்திக் கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததற்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

கடந்த செவ்வாயன்று அரிஸோனாவைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெஸ்மின் டன்பார் எனும் பெண், தனது ஏழு மாதக் குழந்தையுடன் காணாமல் போனார்.

வியாழக்கிழமை அவரது உடல் எரிந்துபோன நிலையில் பீனிக்ஸ் இல் உள்ள கெமல்பெக் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடைசியாக அவர் தனது முன்னாள் காதலனான 20 வயதுடைய அன்துவான் ட்ரவோன் உடன் வெளியே சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் அன்துவான் ட்ரவோன் தான் அவளைக் கொன்று விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவருமாக குழந்தையின் தந்தை யார் என்று கண்டறிவதற்கான சோதனைக்காக சென்றதாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் தந்தை யார்? ஆய்வக முடிவுகள் என்ன கூறின? எதிரான முடிவுகள் வந்ததால் ட்ரவோன், ஜெஸ்மினை கொலை செய்தானா? என்னும் கேள்விகளுக்கான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

ஜெஸ்மினை அடித்துக் குற்றுயிராகப் போட்டு விட்டு அவளது குழந்தையை காரில் வைத்து வேறிடத்தில் கொண்டு விட்டு விட்டு மீண்டும் வந்த ட்ரவோன், ஜெஸ்மினை உயிருடன் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருக்கிறான்.

துடிக்கத் துடிக்க ஜெஸ்மின் சாவதைக் கண் முன்னே பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்து நகர்ந்ததாக அவரே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை, கடத்தல், காயப்பட்ட நபரை கைவிடுதல் மற்றும் குழந்தையை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளானர்.