அவசர கால நிலைமை நீக்கப்பட்டது

0
95

ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியிலும் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசர கால நிலைமை பிரகடணப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது