தனிநபர் வருமானம் 4000 அமெரிக்க டொலர்களை தாண்டியது

0
117

தனிநபர் வருமானம் கடந்த 2017 ஆம் ஆண்டில் 4 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 4 ஆயிரத்து 65 அமெரிக்க டொலராக இருந்துள்ளது. இலங்கை ரூபா பெறுமதியில் இது 6 லட்சத்து 19 ஆயிரத்து 729 ரூபாவாகும்.

2016 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 3 ஆயிரத்து 857 அமெரிக்க டொலர்களாக இருந்தது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தனிநபர் வருமானமானது 7.5 வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டில் வர்த்தக சந்தை விலகளுக்கு அமைய மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியானது 2016 ஆம் ஆண்டும் ஒப்பிடும் போது 11.6 வீதமாக அதிகரித்துள்ளது. நிலையான விலைகளுக்கு அமைய மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தி 3.1 வீதமாக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு தேசிய உற்பத்தியில் கமத்தொழில், மீன்பிடி தொழில் என்பன 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் 6.9 வீத பங்களிப்பை வழங்கியுள்ளன.

இதனை தொழிற்துறை 26.8 வீத பங்களிப்பையும் சேவை துறை 56.8 வீத பங்களிப்பையும் மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்திக்கு வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.