இலங்கை இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை

0
155

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனினும் இதற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யாக பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்கோடி – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆனால் இத்திட்டத்திற்கு இலங்கையிடம் கிரீன் சிக்னல் இல்லை.

மேலும் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.