குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்

0
230

குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தின் அடிப்படையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த பொது மன்னிப்புக் காலம் இந்த மாதம் 22ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தலைமையிலான அதிகாரிகள் இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.