படுக்கை அறை காட்சியில் நடிக்க மாட்டேன் – அமிரா தஸ்தூர்

0
197

‘இஷாக்’ இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் அமிரா தஸ்தூர். தனுசுடன் ‘அனேகன்’ படத்தில் நடித்தார். பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்தி படம் வெளியானது.

அமிரா நடிப்பில் வெளியான 2 இந்தி படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனால், ஏற்பட்ட தனது மனப்போராட்டம் குறித்து கூறியுள்ள அமிரா தஸ்தூர்….

“ ‘இஷாக்’ படம் ஓடவில்லை. என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே, படம் பற்றி வருந்தவில்லை. ‘மிஸ்டர் எக்ஸ்’ படமும் ஒடவில்லை. இதனால் மனவேதனை அடைந்தேன். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்கும் போகவில்லை. பின்னர் மாடலிங் செய்ய தொடங்கினேன். சிறிய வி‌ஷயத்துக்கும் நான் அழுது விடுவேன். காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே போலியாக சினிமாவில் நடிப்பது கடினமாக இருக்கிறது.

படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். எனவே, என் தந்தையை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்ப வில்லை” என்று தெரிவித்துள்ளார்.