பஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

0
171

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.

20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் 12.5% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளை அடுத்தே பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நேற்று (16) 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதமை குறிப்பிடத்தக்கது.