திருகோணமலையில் முச்சக்கர விபத்து, பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலையில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதி

0
111

திருகோணமலையில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை ,அபேயபுர பகுதியைச் சேர்ந்த தென்னக்கோன் வயது(53), அசித்த நாலக்க வயது(22),மற்றும் குகன் வயது(25), ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

அபேயபுர பகுதியிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற முச்சக்கர வண்டியும், திருகோணமலையிலிருந்து நிலாவெளிக்குச் சென்ற முச்சக்கர வண்டியுமே திருகோணமலை சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மது போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இரு முச்சக்கர வண்டி சாரதிகளையும் தடுத்து வைத்துள்ளதோடு, விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.